நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வுக் குழு.. எதிர்ப்பு, ஆதரவு கருத்து கிடைத்துள்ளன - நீதியரசர் ஏ.கே.ராஜன் விளக்கம்

நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அது நீட்டிக்கப்படலாம் என்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறியுள்ளார்.
x
நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வுக் குழு.. எதிர்ப்பு, ஆதரவு கருத்து கிடைத்துள்ளன - நீதியரசர் ஏ.கே.ராஜன் விளக்கம் 

நீட் தேர்வு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய, ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும், அது நீட்டிக்கப்படலாம் என்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் கூறியுள்ளார். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராயும், அவர் தலைமையிலான குழுவின் 3வது கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நீதியரசர் ஏ.கே.ராஜன், நீட் தேர்வு ஆதரவு மற்றும் எதிர்ப்பு குறித்து 86 ஆயிரத்து 342 கருத்துகள் இதுவரை பெறப்பட்டுள்ளது என்றார். அனைத்து கருத்துக்களையும் கேட்ட பின், அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்