பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1024 கன அடியிலிருந்து 2944 கன அடியாக அதிகரித்துள்ளது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1024 கன அடியிலிருந்து 2944 கன அடியாக அதிகரித்துள்ளது

வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று  அணைக்கு நீர்வரத்து 1024 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 2944 கன அடியாக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 93.42 அடியாகவும், நீர் இருப்பு 23.8 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 1000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்