உடல்நலம் தேறிய சிவசங்கர் பாபா செங்கல்பட்டு சிறைக்கு திரும்புகிறார்
பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பாலியல் தொந்தரவு வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, செங்கல்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததான புகாரில், கடந்த 16ஆம் தேதி அந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் டெல்லியில் கைது செய்தனர். விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்த சிவசங்கர் பாபாவை 17ஆம் தேதி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 18ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா, மேற்கொள்வதற்கு காவல்துறையினர் அனுமதி அளித்தனர் உடல் நலம் தேறிய தாக மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து சி.பி. சி.ஐ.டி. போலீசார் பலத்த பாதுகாப்புடன் செங்கல்பட்டு சிறைக்கு அழைத்து சென்றனர்.
Next Story
