பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ​​தொல்லை... கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ​​தொல்லை... கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன்
x
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ​​தொல்லை... கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் ராஜகோபாலன் 

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரில் கடந்த மாதம் 24-ந் தேதி ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டார்.இந்த வழக்கில் ராஜகோபால் மீது குற்றப்பத்திரிக்கை தயார் செய்து விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.இந்தநிலையில் ராஜகோபாலன் பிணையில் வர முடியாத அளவிற்கு ஒரு வருடம் சிறையில் வைக்க குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை அவர் மீது பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பான உத்தரவை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்