மடிக்கணினிகள் வழங்ககோரிய வழக்கு - "அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது"

மடிக்கணினிகள் வழங்ககோரிய வழக்கு - "அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது"
x
மடிக்கணினிகள் வழங்ககோரிய வழக்கு - "அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது"
 
விடுபட்டுள்ள மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்ககோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என கூறி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்தது.புதுக்கோட்டையை சேர்ந்த காவுதீன், என்பவர் தாக்கல் செய்த மனுவில், 2017-2018 ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை என கூறியுள்ளார்.இதனால், மாணவர்கள் கொரோனா காலத்தில் இணையதளம் மூலம் வகுப்பு பயில, தேர்வு எழுத சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும்,2017-2018 ம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கு இலவச மடி கணினி வழங்க உத்தரவிட வேண்டும் என, கூறியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீப் பேனர்ஜி நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது,  அப்போது, மாணவர்களுக்கு வழங்குவதற்காக மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.விரைவில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச மடி கணினி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்று கூறிய நீதிமன்றம்,விடுப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் மடி கணினி வழங்க அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறி, வழக்கை முடித்து வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்