கொரோனா தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - வழக்கை ரத்து செய்ய மன்சூர் அலிகான் மனு தாக்கல்

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவிற்கு, பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கொரோனா தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - வழக்கை ரத்து செய்ய மன்சூர் அலிகான் மனு தாக்கல் 

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பியதாக தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த மனுவிற்கு, பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர் விவேக் மரணத்தையும், கொரோனா தடுப்பூசியையும் தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில், மன்சூர் அலிகான் மீது கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம், கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு, 2 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உள்நோக்கத்தோடு தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை என கூறியுள்ளார். மனுவை விசாரித்த  நீதிபதி நிர்மல்குமார், காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு,  வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்