கேரளாவில் நடந்த விபத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள்

கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
x
கேரளாவில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள ராமநாட்டுக்கரை பகுதியில் காரும் சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் இருந்த 5 பேர் பலியாகினர். பாலக்காடு செற்புளசெரி பகுதியைச் சேர்ந்த முகமது சாகிர், நாசர், அசைனார், சுபைர், தாகிர் ஆகியோர் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது விபத்தில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது,. பாலக்காட்டைச் சேர்ந்தவர்கள் கோழிக்கோட்டில் இருந்து பாலக்காட்டிற்குச் செல்ல ராமநாட்டுகரைக்கு செல்லவேண்டிய தேவையில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்,. மேலும்  விபத்தில் சிக்கிய வாகனம் உட்பட மூன்று வாகனங்கள் கோழிக்கோட்டிலிருந்து புறப்பட்ட நிலையில், ஏனைய வாகனங்கள் வேறு வழியாகச் சென்றபோது இந்த வாகனம் ஏன் ராமநாட்டுகரைக்கு வந்தது எனும் சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது., இந்த நிலையில் போலீசாரின் இதுவரையிலான விசாரணையில், விபத்தில் உயிரிழந்தவர்கள் தங்க கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை அங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் கொண்டு சென்றதும் கண்டுபடிக்கப்பட்டது,.  தங்கத்தை வாங்குவதற்காக  கோழிக்கோட்டிற்கு  சென்றுவிட்டு திரும்பிய போதே அந்த கும்பல் விபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது,. இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்புடைய மற்றொரு வாகனத்தில் சென்ற 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்