"தமிழ் வழி கல்வி, அரசு பள்ளியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை" - ஆளுநர் உரை

திருநங்கைகள், ஆதிதிராவிடர், தமிழ்வழியில் பயின்றோர் ஆகியோருக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன.
x
திருநங்கைகள், ஆதிதிராவிடர், தமிழ்வழியில் பயின்றோர் ஆகியோருக்கான அறிவிப்புகளும் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும், அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கும் அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தற்போது தமிழகத்தில் வழங்கப்படும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றும் அரசு பணிகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான நிரப்பப்படாத காலி பணியிடங்கள் சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் சான்றிதழ்களை வழங்கும் செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டு, விரைவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மையில் நவீன தொழிநுட்பங்களையும், கருவிகளையும், பயன்படுத்தி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பான சுகாதாரமான பணிச்சூழல் உருவாக்கி தரப்படும் என்றும் அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, அவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படும் என்றும், அரசு துறைகளில் விளையாடுட் வீரர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்களின் பணி நியமனம் திறம்பட செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







Next Story

மேலும் செய்திகள்