குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை - எடப்பாடி பழனிசாமி

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி
x
ஆளுநர் உரையில் முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் ஆளுநர் உரையில் இடம்பெறவில்லை

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் நேரத்தில் திமுக கூறியது

தற்போது நீட் தேர்வு குறித்து ஆராய குழு அமைத்துள்ளனர்

ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள்

தற்போது மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறுகிறார்கள்

திமுக தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை

கூட்டுறவு வங்கிகளில் ரத்து செய்யப்பட்ட கடன்களுக்கு ரசீது வழங்கப்படவில்லை

வேளாண் பணிகளில் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது

மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக கூறியது

கல்விக்கடன் தொடர்பாக ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை

தேர்தல் சமயத்தில் திமுக அறிவித்த அறிவிப்புகள் எதுவும் ஆளுநர் உரையில் இல்லை

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் நேரத்தில் திமுக கூறியது

பெட்ரோல், டீசல் தொடர்பாக ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறவில்லை

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு இடம்பெறவில்லை

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் குறித்து ஆளுநர் உரையில் இல்லாதது அநீதி

கொரோனா பரவலை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

கிராமப் புறங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகள் மறைக்கப்படுகின்றன

கொரோனாவால் இறப்பு என சான்றிதழ் வழங்கப்படுவதில்லை

நெகட்டிவ் உள்ளவர்களுக்கு பாசிட்டிவ் என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது

ஆர்டிபிசிஆர் சோதனையில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன

Next Story

மேலும் செய்திகள்