நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார்... முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில், பெங்களூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
x
நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகார்... முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது 

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில், பெங்களூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டனை, சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து, கைது செய்தனர். இதையடுத்து அவரை பெங்களூரில் உள்ள மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் சென்னைக்கு அழைத்து வந்தனர். சென்னை சைதாப்பேட்டை மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதை தொடர்ந்து அடையாறு காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மணிகண்டனிடம், போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Next Story

மேலும் செய்திகள்