சிவசங்கர் பாபா தப்பியோட்டம்

டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா தப்பியோட்டம்
x
சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் சென்ற நிலையில், டேராடூனில் இருந்து அவர் தப்பி உள்ளார்.சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து மாமல்லபுரம் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்த வழக்கானது  , சிபிசிஐடி போலீசாரின் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள மருத்துவமனையில், சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வருவதாக கிடைத்த தகவலை அடுத்து சிபிசிஐடி போலீசார் அங்கு சென்றனர். ஆனால் போலீசார் வருவது குறித்து தகவல் கிடைத்த சிவசங்கர் பாபா, டேராடூன் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றதாக தெரியவந்துள்ளது. சிவசங்கர் பாபா ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு நேபாளம் சென்ற தகவலும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவர் நேபாளத்திற்கு தப்பிச்சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்