சசிகலாவுடன் பேசினால் நீக்கம் - அதிமுக தலைமை எச்சரிக்கை

சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை கட்சியிலிருந்து நீக்க அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
x
ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில்.சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த சசிகலா, அரசியல் முக்கியத்துவத்தை தேடிக்கொள்வதற்காக அதிமுகவை அபகரிக்கும் முயற்சியில் சிலருடன் தொலைபேசியில் பேசி வினோத நாடகத்தை அரங்கேற்றி வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


அதிமுக மக்களின் பேரியக்கமாக இருக்குமே தவிர, ஒரு குடும்பத்திற்காக தன்னை ஒரு போதும் அழித்து கொள்ளாது என்றும். அதிமுகவின் லட்சியங்களுக்கு விரோதமாக செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்.சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களும், இனி பேசப்போகும் யாராக இருந்தாலும், கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனக்கு பின்னாலும் அதிமுக 100 ஆண்டுகள் நீடிக்கும் என்ற ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம் என்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்