தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை

தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை
x
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. வெப்பசலனம் காரணமாக  சென்னையில் எழும்பூர், அண்ணாசாலை, புதுப்பேட்டை, பெரம்பூர், கொளத்தூர், தி.நகர், மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால்  சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஒடியது.  இதமான தட்ப வெப்பநிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை திருவொற்றியூர் எண்ணூர்  வண்ணாரப்பேட்டை ,  ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன்  கன மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் வெயில் தாக்கம் குறைந்து பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்தது. குமரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம் . இந்த மாதம் துவக்கத்திலேயே தென்மேற்கு பருவமழை துவங்கிய நிலையில், நாகர்கோவில், தக்கலை, குளச்சல், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் மிதமான மழையும் பின்னர் கன மழையும் பெய்தது. இதனால் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒசூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்தது . கடந்த சில நாட்களாக  கடும் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்தது . பரவலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதனால் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உளுந்தூர் பேட்டை அருகே உள்ள அரசூர் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்த‌து. திடீரென மழை பெய்த‌தால், ஆடு, மாடுகள் மழையில் நனைந்தன. கடந்த சில தினங்களாக கடும் வெயிலால் அனல் காற்று வீசிய நிலையில், இந்த மழையால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்தனர். Next Story

மேலும் செய்திகள்