மேட்டூர் அணை நீர் திறப்பு - டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 8 கண் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த நீரை மலர் தூவி வரவேற்றார்.
x
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், 18-வது முறையாக ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவதாகவும், இதனால்12 மாவட்டங்களில் உள்ள 5 லட்சத்து 21 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், குறுவை சாகுபடி பரப்பை அதிகரிப்பதே அரசின் குறிக்கோள் என்றும், டெல்டா மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் தூர் வாரும் பணி நடந்து வருவதாகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.இது தொடர்பாக  அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை 125 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுவதாகவும், இதற்காக மேட்டூர் அணையில் இருந்து 99 புள்ளி 74 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 25.26 டிஎம்சி தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலம் பூர்த்தி செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் காலங்களில், அணையின் மின் நிலையம் மூலம் 50 மெகாவாட் மின்சாரமும், சுரங்க மின் நிலையம் மூலம் 200 மெகாவாட் மின்சாரமும் என மொத்த 250 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.அணையின் கீழ் பகுதியில் 7 கதவணை நீர் மின் நிலையங்கள் மூலம் தலா 30 மெகாவாட் என மொத்தம் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, குறைந்த பரப்பளவில் மிக அதிக அளவு மகசூலை பெற்று பயனடைய வேண்டும் என முதலமைச்சர் கேட்டு கொண்டுள்ளார். இதனிடையே, மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு பூஜைகளுடன் குறுவை சாகுபடி பணிகளை திருவாரூர் விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்