செலவுகளை 20% குறைக்க கோரும் மத்திய நிதியமைச்சகம் - மத்திய அமைச்சகங்களுக்கு கோரிக்கை

நிதிப்பற்றாக்குறை காரணமாக, அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் அதனை சார்ந்த துறைகள், தங்களது செலவுகளை 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சரகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை தற்போது பார்க்கலாம்.
x
2021-22க்கான பட்ஜெட்டில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை 6.9 சதவீதமாக நிர்ணியக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்புகளினால் நிதிப் பற்றாக்குறை இதையும் தாண்டி வெகுவாக அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.நிதிப்பற்றாகுறையை கட்டுக்குள் கொண்டு வர, அனைத்து மத்திய அமைச்சகங்களும் தங்களின் தேவையற்ற, பயன் தராத, கட்டுப்படுத்த முடிந்த செலவுகளை 20 சதவீதம் வரை குறைக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.உள்நாட்டு வெளிநாட்டு பயணச் செலவுகள், ஓவர்டைம் பணிகளுக்கான தொகைகள், அலுவலக செலவுகள், நிர்வாக செலவுகள், விளம்பர செலவுகள், தளவாட செலவுகள், கொள்முதல் செலவுகள், எரிபொருள் செலவுகள், உணவுக்கான
செலவுகள் போன்றவற்றை குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.மத்திய அரசு, மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகை 1.6 லட்சம் கோடியாக் அதிகரித்துள்ளது. 
கொரோனா தடுப்பூசிகள், நவம்பர் வரை பொது மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குதல் ஆகியவற்றிற்கு மொத்தம் 1.45 லட்சம் கோடி நிதி தேவைப்படுகிறது.வரி வருவாய் குறைந்து வரும் நிலையில், தவிர்க்க முடியாத செலவீனங்கள் வெகுவாக அதிகரித்து வருவதால், இந்த நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 




Next Story

மேலும் செய்திகள்