ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடக்கம் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 44-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.
x
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், 44-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த கூட்டத்தில், மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், பங்கேற்றுள்ளனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார். இந்த கூட்டத்தில், கொரோனா மற்றும் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும், மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து ஆலோசிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நிறைவடைந்த பிறகு பிற்பகலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதால் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்