கொரோனா இல்லாத கிராமம் - "வெளியாட்களுக்கு அனுமதி இல்லை"

கொடைக்கான‌ல் அருகே வெள்ளகெவி எனும் கிராமத்தில் இயற்கை சூழலில், மூலிகை பயன்பாட்டோடு வாழ்வதால் அங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.
x
கொடைக்கான‌ல் அருகே வெள்ளகெவி எனும் கிராமத்தில் இயற்கை சூழலில், மூலிகை பயன்பாட்டோடு வாழ்வதால் அங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இந்த கிராமத்தில் 130 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்ட இந்த மக்கள் இயற்கை மருத்துவம், மூலிகை பயன்பாடு ஆகியவற்றோடு வாழ்கின்றனர். மேலும்,  கிராமத்தை சுற்றி 24 தெய்வங்கள் இருப்பதால் காலணியும் அணிய மாட்டோம் என்கிறார்கள் இந்த மக்கள். எந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் மூலிகைகள் மூலம் குணப்படுத்திக்கொள்வதாக கூறும் இந்த கிராம மக்கள், இதுவரை அங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். எனினும் சாலை வசதி இல்லாதது பெரும் சிரமம் அளிப்பதால், சாலை அமைக்க வேண்டுமென்பது இந்த கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்