ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று குறையாத 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடுதலாக சில தளர்வுகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன
x
வரும் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் தளர்வுகளின் விபரங்களை தற்போது பார்க்கலாம்... தமிழகத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று குறையாத நிலை உள்ளது. இதனை அடிப்படையாக வைத்து இந்த 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன், எலெக்ட்ரிஷியன், பிளம்பர்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர், தச்சர் உள்ளிட்ட சுயதொழில் செய்வோர் சேவை கோருபவர் வீடுகளுக்கு  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இ-பதிவுடன் பணிபுரியலாம் .தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோக்களில் இ - பதிவுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாடகை டாக்சிகளில் ஓட்டுநருடன் சேர்த்து 3 பயணிகள், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பயணிகள் பயணிக்கலாம். ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்ளுக்கு இடுபொருட்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 25 சதவீத பணியாளர்களுடன் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம்கண்கண்ணாடி விற்பனை, பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம் மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்...இந்த 11 மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகள், சலூன்கள் திறக்க அனுமதியில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்