ஏரியில் செத்து மிதந்த மீன்கள் - அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
பதிவு : ஜூன் 11, 2021, 05:00 PM
சேலம் குருவி பண்ணை ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியில் 9.5 ஏக்கர் நிலப்பரப்பில் குருவிபண்ணை ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தகவல் அளித்தனர்.  சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், காவல்துறை உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் ஏரி முழுவதும் மாசடைந்து வருவதாகவும், இதுவே மீன்கள் இறப்புக்கு காரணம் என்றும் அதிகாரிகளிடம் மக்கள் புகார் தெரிவித்தனர். மீன்கள் இறப்புக்கு ரசாயன கழிவுகள் கலப்புதான் காரணமா என்று அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மீன்கள் செத்து மிதப்பதால் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.