பெட்ரோல், டீசல் விலை உயர்வு - காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
பதிவு : ஜூன் 11, 2021, 02:10 PM
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றது. கொரோனா காலத்தில் பொருளாதார பாதிப்படைந்த பொதுமக்களுக்கு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு மேலும் ஒரு சுமையைக் கூட்டியுள்ளது. அத்துடன் எரிபொருட்கள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெல்லியைப் பொருத்தமட்டில் 13 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது.மேலும், கர்நாடகாவில் ஹூப்ளி, பெங்களூரு, மங்களூரு ஆகிய இடங்களிலும், மற்றும் ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் நிலையங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்கள் எழுப்பி, விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிலும் வித்தியாசமாக சைக்கிள்கள், மற்றும் குதிரை வண்டிகளில் வந்தும், காருக்கு மாலை அணிவித்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.