பரோலில் விடுவிக்க கோரிய வழக்கு : "சிறையில் இருந்த மொத்த காலத்தை கணக்கிடுக" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பதிவு : ஜூன் 11, 2021, 08:40 AM
தண்டனை கைதிகளுக்கு பரோல் வழங்கும் போது, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பரோலில் விடுவிக்க கோரிய வழக்கு : "சிறையில் இருந்த மொத்த காலத்தை கணக்கிடுக" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

தண்டனை கைதிகளுக்கு பரோல்  வழங்கும் போது, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.கடந்த 2016ம் ஆண்டு போதை  பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது அலி என்பவருக்கு, 2019 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்த நீதிமன்றம்,10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த‌து.2016 ஆம் ஆண்டு  கைது செய்யபட்டது முதல் தொடர் சிறைவாசம் அனுபவித்து வரும் முகமது அலி,  பரோல் கேட்டு புழல் சிறை நிர்வாகத்துக்கு விண்ணப்பித்தார்.சிறைவிதிப்படி மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்த பிறகுதான் ஒரு மாத கால சாதாரண விடுப்பிற்கு தகுதி பெறுவார்கள் எனக் கூறி, இந்த விண்ணப்பத்தை மத்திய சிறைக்கண்காணிப்பாளர் நிராகரித்துள்ளார்.இதை எதிர்த்து, முகமது அலி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.என்.மஞ்சுளா அமர்வு, தண்டனை கைதிகளின் பரோல்  தொடர்பான கோரிக்கைகளை பரிசீலிக்கும் போது,  விசாரணை கைதியாக அவர்கள் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள செய்யவேண்டும் என அறிவுறுத்தியது.புழல் சிறை கண்காணிப்பாளரின் உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள்,  மனுதரார் கோரிக்கை தொடர்பான ஆவணங்களை நான்கு வாரத்திற்குள் மாநில அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அதனடிப்படையில் மாநில அரசு நான்கு வார காலத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1849 views

கொடைக்கானலில் ரூ.100ஐ தாண்டிய பெட்ரோல் விலை

தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானலில் பெட்ரோல் 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

48 views

வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்

உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....

26 views

பிற செய்திகள்

கோயில் நிலம் அபகரிக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மீது புகார்... வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடி

சிவகங்கையில் கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டதோடு நிலத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

5 views

கூடுதலாக 10 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கூடுதலாக 10 ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

13 views

குழந்தைகளை தாக்குமா கொரோனா ? புதுவித நம்பிக்கை அளிக்கும் மருத்துவர்கள்

குழந்தைகளுக்கு எதிரான கொரோனோ தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராத சூழலில், குழந்தைகள் நலம் குறித்து புதுவித நம்பிக்கையை அளித்துள்ளனர்,

11 views

“மதனிடம் ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்“ - “பணம் திரும்ப பெற நடவடிக்கை“

பப்ஜி மதனால் ஏமாற்றப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் புகார் அளிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது....

13 views

புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள்...கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

கல்வி தொலைக்காட்சியில், புதியகல்வியாண்டுக்கான பாடங்கள் ஒளிபரப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

57 views

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

திருவாரூர் அருகே ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.