பெண்களை வீட்டு சிறையில் வைத்து கடன் வசூல் - நடுவீட்டில் அமர்ந்து கொள்ளும் ஊழியர்கள்

கோவில்பட்டியில் பெண்களை வீட்டு சிறை வைத்து கடன் தவணை கேட்ட வீடியோ பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காந்தி நகரில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று மக்களுக்கு நுண் கடன் வழங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கில் மக்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில், இந்த நிதி நிறுவன ஊழியர்கள் வாங்கிய கடனுக்கு  தவணைத் தொகையை திருப்பிச் செலுத்தினால் தான் செல்வோம் என அடாவடியாய் வீட்டு நடுவே அமர்ந்து கொள்வதாக புகார்கள் வந்தன. சரியாக தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி வழங்கும் தேதிகளில் வீட்டுக்கு வரும் கடன் வசூலிப்பாளர்கள், அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே வீட்டில் இருந்து செல்கின்றனர் என பெண்கள் வேதனையை வெளிப்படுத்தினர். வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, பணத்தை தந்தால் தான் செல்வேன் என கடன் வசூல் செய்யும் ஊழியர் ஒருவர் அடாவடி காட்டிய வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்