செவிலியர் பாதங்களில் மலர் தூவிய நோயாளி - சிகிச்சை முடிந்து திரும்பும் போது நன்றி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், அரசு மருத்துவமனையில் ஐந்து நாட்கள் சிகிச்சையில் இருந்த வழக்கறிஞர் ஒருவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது செவிலியர்களின் பாதங்களில் மல்லிகை பூவை தூவி, நன்றி தெரிவித்தார்.
x
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், அரசு மருத்துவமனையில் ஐந்து நாட்கள் சிகிச்சையில் இருந்த வழக்கறிஞர் ஒருவர், சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது செவிலியர்களின் பாதங்களில் மல்லிகை பூவை தூவி, நன்றி தெரிவித்தார். அறந்தாங்கியைச் சேர்ந்த வழக்கறிஞர் மணிமாறன்,என்பவருக்கு  நுரையீரலில் தொற்று ஏற்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் முழுமையாக குணமடைந்தார். இதையடுத்து மருத்துவனையில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது, தன்னை நன்றாக கவனித்த செலிவியர்களின் பாதங்களில் மணிமாறன் பூக்களை தூவி, நன்றி தெரிவித்தார். இந்த காட்சி சமூகவலை தளங்களில் பரவி வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்