ஆன் லைன் வகுப்பிற்கு முழு கட்டணம் - கட்டணம் செலுத்த முடியாமல் பெற்றோர் அவதி

ஆன் லைன் வகுப்பிற்கு முழு கட்டணம் செலுத்த முடியாமல், வருமானம் இன்றி அவதிப்படுவதால், கல்வி கட்டணத்தை குறைக்க அல்லது தவணை முறையில் மாற்ற வேண்டும் என்று, வடசென்னை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
கொரோன தொற்று பரவலால், தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்.லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் ஆன் லைன் வகுப்பிற்கு கூட, முழு கட்டணத்தை செலுத்த வேண்டும் என பள்ளி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.வடசென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கூலி வேலை செய்பவர்கள் என்பதால், தற்போது வருமானம் இன்றி தவித்து வருவதாக கூறுகின்றனர். இந்த சூழ்நிலையில், பள்ளிகட்டணத்தை முழுமையாக செலுத்தமுடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.கூலி தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதியில், கட்டணத்தை குறைத்து அல்லது தவணை முறையில் கட்டணம் செலுத்த, அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


 


Next Story

மேலும் செய்திகள்