கொரோனாவுக்கு அட்மிட் ஆனவர் மர்ம மரணம் - அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த பெண் திடீரென மாடியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
x
சென்னை மேற்கு தாம்பரத்தை சேர்ந்தவர் மவுலி. இவரின் மனைவி சுனிதாவுக்கு கடந்த 22ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு மூச்சு திணறல் இருந்ததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே சிகிச்சை பெற்று வந்த சுனிதா கடந்த மாதம் 23ஆம் தேதி திடீரென மாயமானார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் அவரை தேடி வந்தனர். இதனிடையே மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசவே ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில் அது சுனிதா தான் என தெரியவந்ததை தொடர்ந்து அவர் மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உடல் உறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்