ஊரடங்கு - புதிய அறிவிப்புகள் நாளை வெளியாகும்

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் காலம் நீட்டிக்க, முதல்வர் ஸ்டாலினுக்கு, உயர் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்
x
ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முக்கிய அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* இந்நிலையில், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிற மாவட்டங்களில் அதிகாலை நடைபயிற்சி, மற்றும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும், கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்