"ஆய்வு பணியின் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம்" - இறையன்பு
பதிவு : ஜூன் 10, 2021, 12:51 PM
மாவட்டங்களுக்கு ஆய்வு பணிக்காக வரும் போது ஆடம்பர ஏற்பாடுகள் வேண்டாம் என தலைமைசெயலாளர் இறையன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பல்வேறு மாவட்டங்களில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அவர் எழுதியுள்ள கடித‌த்தில்..

* மாவட்டங்களில் ஆய்வு பணிக்காக வரும் போது  ஆடம்பர ஏற்படுகள் எதுவும் வேண்டாம் தெரிவித்து உள்ளார்,

* காலை மற்றும் இரவு நேரங்களில் எளிமையான உணவு வழங்கினால் போதும் எனவும்,

* மதியம், இரண்டு காய்கறிகளுடன் சைவ உணவு போதும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* மேலும் ஆடம்பர ஏற்பாடுகளில் தனக்கு உடன்பாடு இல்லை எனவும் தலைமை செயலாளர் குறிப்பிட்டு உள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.