அரசியல் ஆதாயத்துக்கு செய்ய வேண்டாம்; மாநகராட்சி மூலம் உதவுங்கள் - அமைச்சர் பெரியகருப்பன்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொரோனா நிவாரண உதவிகள் என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறி உள்ளார்.
x
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கொரோனா நிவாரண உதவிகள் என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறி உள்ளார். கோவை சென்ற அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில், அதிமுக எம்.எல்.ஏக்கள் நேரடியாக நிவாரண உதவிகளில் ஈடுபடுவது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அதிமுக எம்.எல்.ஏக்கள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் மக்களுக்கு உதவ வேண்டும் என தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்