கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு - விலைகளை குறைக்க ஒ.பி.எஸ். வேண்டுகோள்

கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க, அரசே சலுகை விலையில் விற்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
கட்டுமான பொருட்களின் விலை அதிகரிப்பு - விலைகளை குறைக்க ஒ.பி.எஸ். வேண்டுகோள்
x
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க, அரசே சலுகை விலையில் விற்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், கட்டுமான பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஒரு மூட்டை சிமெண்ட் 550 ரூபாயாகவும், மூவாயிரத்து 500 ரூபாய்க்கு விற்ற ஒரு யூனிட் ஜல்லி, தற்போது ஐயாயிரம் ரூபாய் உயர்ந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பி, மணல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியில் அம்மா சிமெண்ட் விற்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்