ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி என புகார் - புகார் அளிக்க வந்த ஊராட்சி தலைவர்

கன்னியாகுமரி அருகே புகார் அளிக்க சென்ற ஊராட்சி தலைவரை சார் ஆட்சியர் அலுவலகத்தில் புறக்கணித்ததாக செய்தி வெளியான நிலையில் மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாக உள்ளதாக புகார்கள் வந்தன. இதையடுத்து ஊராட்சி தலைவரான மெர்லியன்ட் தாஸ், தரமற்ற அரிசியுடன் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலுவலகம் சென்றுள்ளார். அப்போது மனு கொடுக்க சென்ற அவரை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனுமதிக்க மறுத்து வெளியேறுமாறு சொன்னதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரிசியை தரமானதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்