மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு - 2 கிராம இளைஞர்கள் மோதல்

மது அருந்தியபோது 2 கிராம இளைஞர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறு - 2 கிராம இளைஞர்கள் மோதல்
x
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள செல்லியம்மன் கோவில் நகர் இளைஞர்களுக்கும் திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே அங்குள்ள தைலத்தோப்பில் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த ராம்தேவ் என்பவர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இது தொடர்பாக பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக, அதிரடி படை, அதிவிரைவு படையினர், அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்