"மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு" - 881 கன அடியிலிருந்து 1181 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று காலை 881 கன அடியில் இருந்த நிலையில், இன்று காலை ஆயிரத்து181 கன அடியாக உயர்ந்துள்ளது.
x
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கேரள கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஒரு சில மாவட்டங்களில்  கன மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கான நீர்வரத்து, நேற்று காலை 881 கன அடியில் இருந்த நிலையில், இன்று காலை ஆயிரத்து181 கன அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையின் நீர் வரத்தை விட நீர் வெளியேற்றம் அதிகமாக உள்ள காரணத்தினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குடிநீர் தேவைக்காக 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம், 96.78அடியாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்