12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கடன்களை திரும்பச் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
x
12 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கடன்களை திரும்பச் செலுத்த கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக, மத்திய அரசை வலியுறுத்துமாறு முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாநில முதலமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.இதுதொடர்பாக ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், டெல்லி, ஜார்க்கண்ட், கேரளா, மராட்டியம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்க மாநில முதலமைச்சர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில், மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மாநிலங்கள் ஒருங்கிணைந்து வலியுறுத்தியதால்,பிரதமர் மோடி தமது முந்தைய முடிவை மாற்றி அமைத்துள்ளார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆகவே, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் கொரோனாவின் இரண்டு அலைகளிலும், வெவ்வேறு தன்மைகளில் நடத்தப்படும் பிரச்சினை தொடர்பாக, அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்துள்ள முதல்வர்,  இந்த நிறுவனங்கள் கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்குவது தொடர்பாக மத்திய அரசை தாம் கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் வரை கடன் நிலுவையில் உள்ள கடனாளர்கள், முதல் இரு காலாண்டுகளுக்கு கடன்களை திரும்பச் செலுத்துவதற்கு கூடுதல் அவகாசம் வழங்கக் கோரி, மத்திய நிதி அமைச்சர், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ஆகியோரை வலியுறுத்த வேண்டும் என்றும்,மாநிலங்கள் கூட்டு வலிமையைக் காட்ட வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்