ஆன்லைன் வகுப்புகள் புதிய வழிகாட்டு நெறிமுறைகளோடு தொடக்கம்

புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன், தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின.
x
புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன், தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின.
ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மாணவ மாணவிகளிடம் இருந்து, தொடர் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, பள்ளிகல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதனை பின்பற்றி ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின.
ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறும் மாணவர்கள் சீருடை அணிந்தபடி பங்கேற்கவும், ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இருப்பது போன்றே உடைகள் அணிந்து இருக்க வேண்டும் என்று, வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. ஆன்லைன் வகுப்புகளின் போது, ஆசிரியர்களின் பின்புற சூழலில், குடும்பத்தை சேர்ந்த மற்ற நபர்களின் நடமாட்டமோ, குரலோ கேட்கக்கூடாது என்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. இதேபோன்று மாணவர்களின் பெயரில்,  அவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், வகுப்பு முடியும் வரை வீடியோவில் முழுமையாக இடம்பெற வேண்டும், வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு, அவை பின்பற்றப்பட்டன. ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்