"தமிழகத்தில் 938 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
x
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், கருப்பு பூஞ்சை நோய்க்கு 3 ஆயிரத்து 840 மருந்துகள் வந்துள்ள நிலையில், தேவை 35 ஆயிரமாக உள்ளதாகக் கூறினார்.  அத்துடன், உலகளாவிய தடுப்பூசி டெண்டரில் யாரும் பங்கேற்காத காரணத்தால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் விரைவில் முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்