தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சியாக்குவோம்; அலுவல் மொழியாக்கிட திமுக அரசு பாடுபடும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் மொழியை மத்திய அரசின் ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக்கிட திமுக அரசு உறுதியுடன் பாடுபடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெரும் முயற்சியால், 2004ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி தமிழுக்கு செம்மொழி தகுதி கிடைத்ததாக அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலக்கிய, இலக்கண வளங்களுடன் கல்வெட்டு காலம் முதல் கணினி காலம் வரை சிறப்புற்று விளங்கும் தமிழ் மொழிக்கு கருணாநிதி அணிகலனாக செம்மொழி தகுதியை ஏற்படுத்தினார் என்றும், ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அந்த தகுதிக்கு, சிறப்பு சேர்க்கும் வகையில், எத்திசையும் தமிழ் மணக்க திமுக அரசு தொடர்ந்து உழைத்திடும் என்றும், முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
அரசியல் சட்டத்தில் 8ஆவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி மற்றும் அலுவல் மொழியாகிட உறுதியுடன் பாடுபடும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Next Story