இ-பதிவு இல்லாமல் காரில் சென்ற பெண் - ஆபாச வார்த்தைகளால் போலீசாரை வசைபாடிய தாய்

சென்னையில் இ-பதிவு இல்லாமல் காரில் சென்ற பெண்ணுக்கு போலீசார் அபராதம் விதித்த நிலையில், அந்தப் பெண்ணின் தாயார் போலீசாரை கடுமையாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
x
சென்னையில் இ-பதிவு இல்லாமல் காரில் சென்ற பெண்ணுக்கு போலீசார் அபராதம் விதித்த நிலையில், அந்தப் பெண்ணின் தாயார் போலீசாரை கடுமையாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

சென்னை சேத்துப்பட்டு சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது, அந்த வழியாக காரில் வந்த பெண், முக கவசம் அணியாமல் இருந்துள்ளார். விசாரணையில், அவரிடம் வெளியில் செல்வதற்கான இ-பதிவும் இல்லை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அந்த பெண்ணுக்கு அபராதம் விதித்த நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண், தனது தாயாரிடம் தெரிவித்து உள்ளார். சிறிது நேரத்தில் சொகுசு காரில் சம்பவ இடத்துக்கு வந்த அந்த பெண்ணின் தாயார், போலீசாரை, தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசினார். தான் வழக்கறிஞர் என்றும், முக கவசம் அணிய முடியாது என்றும் அவர் கூறிய நிலையில், தாயும் மகளும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்