கொரோனா வார்டில் நாய் - நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளியின் படுக்கையில் நாய் ஏறி படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளியின் படுக்கையில் நாய் ஏறி படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூச்சு திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக மருத்துவமனை வளாகத்தில் தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆக்ஸிஜன் வசதியுடன் 10 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒரு படுக்கையில் நாய் ஏறி படுத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்