கண்ணீர் சிந்தும் மலர்கள்...செடிகளிலேயே காய்ந்து கருகும் மலர்கள்...

கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா உள்ளிட்ட, அலங்கார செடிகள் விற்பனையாகாமல், செடியிலேயே மலர்கள் கருகுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்...
கண்ணீர் சிந்தும் மலர்கள்...செடிகளிலேயே காய்ந்து கருகும் மலர்கள்...
x
கொரோனா ஊரடங்கு காரணமாக ரோஜா உள்ளிட்ட, அலங்கார செடிகள் விற்பனையாகாமல், செடியிலேயே மலர்கள் கருகுவதால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்...  

பனிப்போர்வை போற்றிய பசும்புல்வெளி... வண்ண வண்ணமாய் சாயங்களில் குழைந்து போய் சாமரம் வீசும் இதழ்களைக் கொண்ட மலர்கள்... தேன் குடிக்க அலைந்து திரியும் வண்டுகள்... அலாதி இன்பத்திற்கு வேறேதும் தேவையோ எனக் கேட்க வைக்கும் ரம்மியம் தான் இந்தப் பூந்தோட்டங்கள்...

ஓசூர் அருகே ரோஜா உள்ளிட்ட அலங்காரச் செடி நாற்றுகளை உற்பத்தி செய்து வருகின்றன 20க்கும் மேற்பட்ட கிராமங்கள்...

இவர்கள் நர்சரி பண்ணைகள் அமைத்து, ரோஜாமலர்கள், செண்டுமல்லி, மல்லிகை, முல்லை, குரோட்டன்ஸ் செடிகள், படரும் கொடிகள், மற்றும் கொய்யா மாதுளை உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான தாவர வகைகளை பதியம் போடும் முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர்...

தென்னிந்தியாவிலேயே இது போன்று, அனைத்து வகையான் அலங்கார செடி நாற்றுகளையும், வேறு எங்கும் வாங்க முடியாது என்பதால், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வந்து செடிகளை வாங்கிச் செல்வர்...

Next Story

மேலும் செய்திகள்