புதுச்சேரி அமைச்சரவையில் பாஜக

புதுச்சேரி அமைச்சரவையில், பாஜக சார்பில் இடம் பெறும் அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.
x
புதுச்சேரி அமைச்சரவையில், பாஜக சார்பில் இடம் பெறும் அமைச்சர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

என்.ஆர். காங்., கட்சிக்கு 3 அமைச்சர் பதவி, துணை சபாநாயகர் பதவியும், பா.ஜ.வுக்கு
சபாநாயகர், 2 அமைச்சர் பதவிகள் வழங்க ஏற்கனவே உடன்பாடு ஏற்பட்டது.  இதனையடுத்து புதுச்சேரிக்கு வந்த பாஜக மேலிட பார்வையாளர் ராஜீவ் சந்திரசேகர்,
வெள்ளிக்கிழமையான்று, முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து, பாஜக அமைச்சர்கள் யார் என்பது குறித்து பேசினார். அப்போது எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இதனையடுத்து பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்பு, சனிக்கிழமையன்று, மீண்டும் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அமைச்சரவையில் இடபெறக்கூடிய  இரண்டு பாஜக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் குறித்த பெயர் பட்டியலை ரங்கசாமியுடன் கொடுத்துள்ளார். இது குறித்து இருவரும்  விவாதித்து இறுதி செய்தனர். இதில் அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார்,சபாநாயகராக செல்வம் ஆகியோர்  இடம்பெற்றுள்ளதாக தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்