"அரசு ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்" - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
x
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளனர். அதில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும்,  20-ஆம் தேதிக்குள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இந்த சுற்றறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கை, பள்ளிகளை திறப்பதற்கான ஆயத்தமாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
==


Next Story

மேலும் செய்திகள்