தடுப்பூசி செலுத்திய 2 மாத சிசு உயிரிழப்பு - புகாரின் பேரில் போலீசார் விசாரணை

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், தடுப்பூசி போட்ட நிலையில், 2 மாத சிசு உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக புகாரளித்துள்ளனர்
தடுப்பூசி செலுத்திய 2 மாத சிசு உயிரிழப்பு - புகாரின் பேரில் போலீசார் விசாரணை
x
தடுப்பூசி செலுத்திய 2 மாத சிசு உயிரிழப்பு - புகாரின் பேரில் போலீசார் விசாரணை
 
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், தடுப்பூசி போட்ட  நிலையில், 2 மாத சிசு உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக புகாரளித்துள்ளனர்.புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சின்னகண்ணுசெட்டித் தெருவைச் சேர்ந்த கோபி-கலைவாணி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்தவுடன் சிசுவுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், 2ஆவது தவணை தடுப்பூசி 55 நாட்களுக்குள் போட்டுள்ளனர். 3ஆம் தேதி காலை 11 மணியளவில், தடுப்பூசி போட்ட நிலையில், வீட்டுக்கு வந்த குழந்தைக்கு காய்ச்சல் வந்துள்ளது. மறுநாள் அதிகாலை 3 மணிக்கு, குழந்தை காய்ச்சல் அதிகமானதால், பாராசிட்டமல் மாத்திரை கொடுத்துள்ளனர். காலை 6 மணிக்கு மயங்கிய நிலையில் இருந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், தந்தை கோபி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்