4 மாவட்டங்களில் ஆய்வு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் திட்டம்

தமிழக மருத்துவமனைகளில் 32 ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக உள்ளதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
x
நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் செயல்பாடுகள், தடுப்பூசி உற்பத்தி செய்யும் பட்சத்தில் அந்த நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார். 
 
தமிழகம் முழுவதும் 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளதாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத நிலை இருப்பதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்தை தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மைய விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் 32 ஆயிரத்து 646 படுக்கைகள் காலியாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்