தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு குறைவு தடுப்பூசி செலுத்தும் பணியில் சிக்கல் - தமிழக சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்ததால், இன்று தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைந்ததால், இன்று தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


தமிழத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில்,கடந்த ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் 6 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.  

தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வந்த நிலையில், நேற்றிரவு வந்தடைந்த 50 ஆயிரம் கோவேக்சின் தடுப்பூசிகளுடன் சேர்த்து, 99ஆயிரம் கோவேக்சின் மற்றும் 53 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும், 

இந்தத் தடுப்பூசிகளை இன்றுதான் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப இருப்பதாகவும் கூறியுள்ள நிலையில், இன்று தடுப்பூசி செலுத்தும் பணி வழக்கம் போல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் கூடுதல் தடுப்பூசி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஜூன் 15 முதல் 30ம் தேதிக்குள் 18 லட்சத்து 36 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும், 

தமிழக அரசின் நேரடி கொள்முதல் அடிப்படையில், 16 லட்சத்து 83 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்