மதுரை அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 450 ஆக்சிஜன் படுக்கைகள் - முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக தகவல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் தொப்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதிகள் தயாராக உள்ள 450 படுகைகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
x
மதுரை அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 450 ஆக்சிஜன் படுக்கைகள் - முதல்வர் திறந்து வைக்க உள்ளதாக தகவல்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பல்நோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு மற்றும் தொப்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதிகள் தயாராக உள்ள 450 படுகைகளை மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.மதுரை மாவட்டத்தில் தற்போது 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் . இதனால் போதிய ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் நோயாளிகள் தவித்து வருகின்றனர் . இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் தொப்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 500 படுக்கை வசதி ஏற்படுத்தப்படும் தமிழக அரசு அறிவித்திருந்தது .அதில் முதல் கட்டமாக 200 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதேபோல, அரசு ராஜாஜி மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள் உள்ளது. இவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு, முதல்வர் ஸ்டாலின்  விரைவில் காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளார் .

Next Story

மேலும் செய்திகள்