ஆன்லைன் வகுப்புக்கு புது விதி - குழு அமைப்பு

கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது.
x
கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்துள்ளது. 

 கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி இந்த குழு தீவிரமாக ஈடுபட உள்ளது. நேரடி வகுப்புகளைப் போன்றே, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும்,  ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தனி குழு, வகுப்பறை செயல்பாடுகளை முழுவதுமாக பதிவு செய்ய செய்ய நடவடிக்கை,  புகார் பிரிவு உருவாக்குதல், இணைய வசதியை வேகப்படுத்துதல் போன்றவை குழுவின் பரிந்துரையில் இடம்பெற வாய்ப்புள்ளது. 
 வரும் 11ஆம் தேதி ஆன்லைன் வகுப்பு விதிமுறைகளுக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசிடம் இந்த குழு சமர்ப்பிக்க உள்ளது. Card-8 அன்றைய தினம் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிடுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்