நீட் தாக்கம் : ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு - முதலமைச்சர் ஸ்டாலின்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
x
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய உயர்நிலைக் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

 இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து ஆணையிட்டுள்ளார்.  நீட் தேர்வால் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் மருத்துவ கல்வி பயில வாய்ப்பு மறுப்பு என கல்வியாளர்கள் கருதுகிறார்கள் என்றும் Card-3 சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை கைவிட  பல சட்டப் போராட்டங்களை தமிழக அரசு நடத்தி வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்று கடமை தமிழ்நாட்டுக்கு எப்போதும் உண்டு எனக் செய்தி குறிப்பில் கூறியுள்ள அவர், நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகளை அகற்ற அனைத்து நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கும் என உறுதி அளித்துள்ளார். நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரிசெய்யும் வகையில் புதிய முறையை வகுப்பது குறித்தும் இந்த குழு ஆய்வு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.  நீட் தேர்வு முறைக்கு மாற்றாக மாணவர் சேர்க்கை முறையை வகுத்து உயர்நிலை குழு பரிந்துரைக்க வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்