ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு - நேரில் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்க உள்ளார்.
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு - நேரில் திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
x
மேட்டூர் அணையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் திறந்து வைக்க உள்ளார். குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஜூன் 12ஆம் தேதி அணை திறக்கப்படும் என அறிவித்தார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வரும் 12ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வந்து மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ளார். இதன் மூலம் 5.21 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்