சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது - ரோந்து போலீசார் நடவடிக்கை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
x
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். வலையர்பாளையத்தைச் சேர்ந்த மலையாளன் என்பவர், தனது நண்பர்களான குருமூர்த்தி, சண்மூகம் ஆகியோருடன் இணைந்து உறவினர் ஒருவரின் வீட்டில் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாயனூர் காவல் ஆய்வாளர் பாலகிருத்திகா தலைமையிலான போலீசார், சாராயம் காய்ச்சிய மூவரையும் கைது செய்தனர். மேலும், சாராயம் காய்ச்ச பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்