"12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும்" - கமல்ஹாசன் வலியுறுத்தல்

பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்று, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
x
அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, மாணவர் நலனுக்கு எதிரானது என, கல்வியாளர்கள் கருதுவதாக கூறியுள்ளார்.

கல்லூரிகளில் சேர, வெளிநாடுகளில் படிக்க, வேலைவாய்ப்பு பெற, 12-ம் வகுப்பு தேர்வு அவசியம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு தேர்வு அட்டவணையை வெளியிட்டு, தேர்வு நடத்தலாம் என கமல் கூறியுள்ளார். கேரளா மாநிலத்தை முன் உதாரணமாக கொண்டு தமிழகத்தில் தேர்வு நடத்த வேண்டும் என்றும், 12-ம் வகுப்பு தேர்வு நடத்தும் விஷயத்தில் தமிழக அரசு தொலைநோக்குப் பார்வையுடன் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்களின் கருத்துக்களை கேட்டு, தமிழக அரசு 12-ம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என கமல் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்